#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் கூட்டணி சேரும் விஷால் மற்றும் சுந்தர் சி! விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்!
நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என பல பொறுப்புகளை வகிக்கும் நடிகர் விஷால் சுந்தர் சி உடன் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கலகலப்பு, அரண்மனை என அடுத்தடுத்து தெறிக்கவிடும் இயக்குனர் சுந்தர் சி தற்போது நடிகர் விஷாலுடன் கூட்டணி சேர்ந்திருப்பது விஷால் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த முதல் படம் மதகராஜா. அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படம் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்று தந்தது.
தெலுங்கில் பவன்கல்யாண் நடித்த ‘ஆத்தாரின் டிக்கி தாரெதி ‘ படத்தின் தமிழ் ரீமேக்கை சிம்புவை வைத்து இயக்கத் தயாராகி கொண்டிருக்கும் சுந்தர் .சி, இந்த படத்தை முடித்ததும், விஷால் நடிக்கும் படவேலைகளை தொடங்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.