பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"ஹீரோக்களுக்கு மது அருந்தும் காட்சிகளே நான் வைத்ததில்லை" - இயக்குனர் விக்னேஷ் சிவன் பெருமிதம்.!
போடா போடி, நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம், பாவக்கதைகள், காத்து வாக்குள 2 காதல் ஆகிய படங்ளையே எழுதி இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் நெற்றிக்கண், கோலங்கள், ராக்கி, கனெக்ட் உட்பட பல படங்களை தயாரித்தும் வழங்கி இருக்கிறார்.
நடிகை நயன்தாராவும் - இயக்குனர் விக்னேஷ் சிவனும் நானும் ரௌடிதான் படத்திற்கு பின்னர் காதல் வயப்பட்டு, தற்போது திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு பெற்றோராகி இருக்கின்றனர். இவரின் திரைப்படங்களில் கதாநாயகன் மதுபானம் அருந்தும் காட்சிகள் பதிவாகி இருக்காது.
இந்த விஷயம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறுகையில், "எனது படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் புகை பிடிப்பது, மதுபானம் அருந்துவது போன்று இருக்கும் காட்சிகளை நான் காண்பித்தது இல்லை. நானும் ரௌடிதான் திரைப்படம் புதுச்சேரியில் எடுக்கப்பட்டது.
அந்த படத்தில் ஒருமுறை கூட ஹீரோ புகை பிடிப்பது, மதுபானம் அருந்துவது போன்ற காட்சிகள் என்பது பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து சென்சார் போர்டு அதிகாரிகள் என்னிடம் வியப்பாக பேசி மகிழ்ந்தனர்" என்று தெரிவித்தார்.