#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடிபட்டு இரத்த காயத்துடன் வலியில் தவிக்கும் திவ்யா கணேஷ்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. விவாகரத்தான குடும்ப பெண்ணின் கஷ்டங்களை எடுத்துரைக்கும் கதை தான் பாக்கியலட்சுமி. இதனால் இந்த சீரியல் பெண்கள் மத்தியில் மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்தமான சீரியலாக இருக்கிறது.
இந்த தொடரில் பாக்கியலட்சுமியின் மருமகளான ஜெனி கர்ப்பமாக இருக்கிறார். ஜெனி கதாபாத்திரத்தில் நடிக்கும் திவ்யா கணேஷுக்கு சமூக வலைதளங்களில் தனி ரசிகர் கூட்டங்கள் உள்ளன. திவ்யா கணேஷின் நடிப்பு தொடர்ந்து ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல் கதையின் படி ஜெனிக்கு கீழே விழுந்து அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜெனியை கோபியின் இரண்டாவது மனைவியான ராதிகா மருத்துவமனையில் அனுமதித்து ஒரு காட்சி ஒளிபரப்பானது.
இது போன்ற நிலையில், இந்த காட்சி படப்பிடிப்பின் போது ஜெனி கீழே விழுந்து உண்மையாகவே அடிபட்டு ரத்தம் வந்தது. இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் விரைந்து வந்து முதல்உதவி செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.