#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆண் குழந்தைக்கு தாயான எமியின் குழந்தை பெயர் என்ன தெரியுமா?
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 என சில படங்களே நடித்த போதும், தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம், தமிழில் வேகமாக முன்னேறினார். லண்டனைச் சேர்ந்த எமி 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.
மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார்.
இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
மேலும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று எமிக்கு அழகான ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அதற்கு ஆண்ட்ராஸ் என பெயரிட்டுள்ளனர்.