#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விரைவில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள டாக்டர் திரைப்படம்! அட.. எப்போ தெரியுமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கியிருந்த நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.
மேலும் இப்படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் மற்றும் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்த இப்படம் அக்டோபர் 9ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.
இந்த நிலையில் தற்போது டாக்டர் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது . மேலும் அதே நாளில் டாக்டர் படம் சன் நெக்ஸ்ட்லிலும், வெளியாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.