#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட! நடிகை திரிஷாவிற்குள் இவ்வளவு திறமையா! வேற லெவலில் சும்மா அசத்துறாரே! வாயடைத்துபோன ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை திரிஷா. அவரது நடிப்பில் உருவான ராங்கி மற்றும் பரமபத விளையாட்டு போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
எப்பொழுதுமே சாகசங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகை திரிஷா ஸ்கை வாக், ஆழ்கடல் நீச்சல், மலை ஏற்றம் என பல முயற்சிகளில் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்காக குதிரையேற்ற பயிற்சி மேற்கொள்ள வேண்டி இருந்தது.
இந்த நிலையில், கொரோனா காலத்தை பயன்படுத்தி அவர் முறையாக குதிரையேற்ற பயிற்சியை கற்று, ஆரம்பக்கட்ட குதிரையேற்ற வீராங்கனை என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும் இன்னும் இரு நிலைகளை அவர் கற்று முடித்தால் குதிரை பந்தயங்களில் கலந்து கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.