மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தன் தங்கச்சி நடிகைக்காக சிவகார்த்திகேயன் செய்யும் காரியம்.! நீங்க மிஸ் பண்ணிட்டாதீங்க!!
தமிழ் சினிமாவில் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உள்ளிட்ட பல படங்களில் அசத்தலாக நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா. அவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் எக்கசக்கமான படங்களை கைவசம் கொண்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டிரைவர் ஜமுனா.
இந்த படத்தை ‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய கிங்ஸ்லின் இயக்குகிறார். இப்படத்தை பதினெட்டு ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கார் டிரைவராக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து படத்தில் இருந்து வெளிவந்த இரு போஸ்டர்கள் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிலையில் டிரைவர் ஜமுனா படத்தின் ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று மாலை வெளியிட உள்ளார். இதுகுறித்த அறிவிப்பை பட குழு வெளியிட்ட நிலையில் அது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யாராஜேஷ் இவரும் இணைந்து அண்ணன் தங்கையாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தனர்.