#Breaking: 4 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு; மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!
கனமழை-வெள்ளம் காரணமாக நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது.
புயலால் பெருமழை-வெள்ளம்
வங்கக்கடலில் உருவாகிய பெஞ்சல் புயல் காரணமாக, தமிழ்நாட்டில் வடகடலோரம் உள்ள விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மாநிலத்தின் பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால் விழுப்புரம் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பல கிராமங்களை சூழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: விழுப்புரத்தில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. முதல் மாவட்டமாக வெளியானது அறிவிப்பு.!
பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்நிலையில், கனமழை காரணமாக திருவண்ணாமலை, கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள காரணத்தால், நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
அதேபோல, வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி மாநிலத்திற்கு பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #JustIN: என்னது புயல் இன்னும் கரையவே கடக்கவில்லையா?.. தமிழ்நாடு வெதர்மேன் ஷாக் தகவல்..!