"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
#Breaking: ஆளுநர் உரையை புறக்கணித்த விவகாரம்; துரைமுருகன் தீர்மானம் - ஒருமனதாக நிறைவேற்றம்.!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, 2025 சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு உரை நிகழ்த்த வந்திருந்தார். அப்போது, அதிமுக, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள், அமளியில் ஈடுபட்டது. இதனிடையே, தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் ஆர்.என் ரவி தனது உரையை புறக்கணித்து வெளியேறி இருந்தார். இந்த விஷயம் சர்ச்சையானது.
துரைமுருகன் பேச்சு
இந்நிலையில், அவை முன்னவர் துரைமுருகன் பேசுகையில், "2023 ம் ஆண்டு ஜனவரி 09 அன்று உரையாற்றியபோது, அவரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்த உரையில் மாற்றம் நிகழ்த்தி ஆளுநர் உரையாற்றி இருந்தார். 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதியும் ஆளுநர் உரையாற்றியபோது, ஆளுநர் தனது நிலை மீறி செயல்பட்டு இருந்தார். அதேபோல, 2025 ம் ஆண்டு ஜனவரி 06 சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்ற வந்த ஆளுநர், உரையை நிகழ்த்தாமலேயே சென்று இருக்கிறார். மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு ஆளுநர் பதவியின் மீது மாறுபட்ட கருத்து இருந்தாலும், அவர் அப்பதவிக்கான மரியாதையை தவறாது கொடுத்து வந்தார்.
ஆளுநரின் செயலுக்கு கண்டிப்பு
ஆளுநர் முந்தைய ஆண்டுகளை போல, ஆளுநர் உரையை முழுமையாக படிக்காமல் செல்கிறார். தேசியகீதம் பாடப்படாதது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டம் 176 பிரிவின் கீழ், ஆளுநர் உரை நிகழ்த்துவார். தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசியகீதம் இசைக்கப்படுவது மரபு. ஆளுநரின் நோக்கம் எப்படிப்பட்டது? இதனை வீணாக சர்ச்சையாக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: #Breaking: சட்டப்பேரவையில் கடும் அமளி.. அதிமுகவினர் வெளியேற்றம் - சபாநாயகர் உத்தரவு.!
தேசியகீதத்துடன் நிறைவு
நமது திமுக அரசு தேசிய கீதத்தின் மீதும், சுதந்திர போராட்ட வீரர்கள் மீதும் நன்மதிப்பு கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆளுநர் தமிழ்நாடு அரசால் விதியின்படி, ஆளுநர் உரையை படிக்காமல் சென்றுவிட்டார். ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட உரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் உள்ள பிற சட்டமன்றங்களுக்கும் மட்டுமல்லாது, உலகளவில் இருக்கும் சட்டமன்றங்களுக்கு வித்திடும் வகையில், அவைகுறிப்பில் பதிவு செய்திடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் இடம்பெற்ற உரையே பதிவு செய்யப்படும் என தீர்மானம் வேண்டும்" என பேசினார். அதனைத்தொடர்ந்து, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட உரையில் இருக்கும் பதிவுகள் மட்டுமே அவைகுறிப்பில் இடம்பெறும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தேசிய கீதத்துடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.
இதையும் படிங்க: #Breaking: "வந்த வேகத்தில் இருந்து புறப்பட்டார்" - சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்; அதிமுக, காங்கிரஸ், தவாக கோஷம்.!