#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸில் எனது 50 ஓட்டும் அவருக்கு மட்டும்தான்.! அடித்து கூறிய அந்த பிரபலம் யார் தெரியுமா?
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. அதேபோல பிக் பாஸ் சீசன் மூன்றிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் பாத்திமா பாபு எலிமினேட் செய்யபட்டப்பட்டார். அதனை தொடர்ந்து தனது ஓங்கியொலிக்கும் பேச்சாலும், சண்டைகளாலும் பிக்பாஸ் வீட்டிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்திவந்த போட்டியாளரான வனிதா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
i பிக் பாஸ் சீசன் 3ல் 16 போட்டியாளர்களில் ஒருவராக இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் என்பவர் கலந்து கொண்டுள்ளார். இவர் மிகவும் கஷ்டப்படக் கூடிய வறுமையான குடும்பத்தில் இருந்து தீராத முயற்சியால் முன்னேறி வந்தவர். மேலும் தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் அன்புடன் பழக கூடியவர். மேலும் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், நேர்மையாக இருப்பவர். மேலும் கடந்த வாரம் வனிதா செய்த தவறை தைரியமாக தட்டிக்கேட்டு குரல் எழுப்பியிருந்தார். இதனால் ரசிகர்கள் இவருக்கு பெரும் ஆதரவு அளித்தனர்.
இந்நிலையில் பிக்பாஸ் குறித்து நடிகர் ஆர்யா கலந்துகொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் போட்டியாளரான அபர்ணதி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அப்பொழுது அவர் பிக்பாஸ் வீட்டில் எனக்கு பிடித்தது தர்ஷனை தான். அவனின் நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
மேலும் வனிதாவிடம் சரியாக பேசியபோது, நானே வீட்டில் கை தட்டி ரசித்தேன். மேலும் அவனை தான் சைட் அடிப்பேன். அதுமட்டுமின்றி அவன் மட்டும் நாமினேஷன் லிஸ்ட்டில் வந்தால் எனது 50 ஓட்டும்அவனுக்கு மட்டும்தான் என கூறியுள்ளார்.