#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எதிர்நீச்சல் ஆதிரையா இது.?! நீச்சல்குள புகைப்படத்தை கண்டு வியக்கும் ரசிகர்கள்.!
சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் எதிர்நீச்சல் சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதன் வித்தியாசமான கதைகளும் பெண் அடிமைத்தனத்தை எதிர்த்து போராடும் வகையில் நகர்வதால் இதற்கு தற்போதைய இளம் தலைமுறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கின்றது.
இந்த சீரியலின் கதை குறித்து சமூக வலைதளங்களில் கூட அடிக்கடி இளம் தலைமுறையினர் பதிவுகளை வெளியிடுவது வழக்கம். எதிர் நீச்சலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாரிமுத்து கேரக்டர் பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் கூட அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.
சீரியலில் கதை தெளிவு ஏற்பட்டாலும் கூட குணசேகரன் கதாபாத்திரத்தினால் அந்த சீரியலின் சுவாரசியம் நீர்த்துப் போகாமல் தாங்கி பிடிப்பார் என்று பலரும் விமர்சிப்பது வழக்கம். வெள்ளித்திரை நடிகர் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதைவிட அதிகமாக சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.
அந்த வகையில் சீரியலில் குணசேகரனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சத்யா தேவராஜனுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். அவரது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் அவரை பாலோ செய்து வருகின்றனர். அந்த வகையில், சத்யா தேவராஜன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நீச்சல் குள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது நம்ம ஆதிரையா என்று வியந்து போய் கமெண்ட் போட்டு வருகின்றனர்.