#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ச்சை.. அந்த படத்துல ஏன் நடிச்சோம்னு இருக்கு.. கேரியரே போச்சு - எவர்கிரீன் நடிகை அம்பிகா கதறல்..!!
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா. 80s எவர்கிரீன் நடிகைகள் என்றாலே அதில் கண்டிப்பாக நடிகை அம்பிகாவின் பெயரும் இருக்கும். இவர் ரஜினி, கமல், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார்.
எக்ஸ்பிரஷன்ஸ் மற்றும் கண்ணசைவால் ரசிகர்களை கட்டிப்போட்ட அம்பிகா பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக "அவன் இவன்" படத்தில் நடித்து, தனது நடிப்பால் அனைவரையும் அம்பிகா மிரட்டியிருப்பார். அப்படத்திற்கு பின் தற்போது சீரியல்களில் இவர் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அம்பிகா பங்கேற்றபோது, 'இதுவரை வாழ்க்கையில் இந்த படத்தில் ஏன் நடிச்சோம் என்று நினைத்துள்ளீர்களா?' என தொகுப்பாளர் கேள்வி கேட்கையில், அம்பிகா தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் கூறியதாவது, "அந்தப்படத்தில் எனக்கு இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தார்கள். நான் நடிக்க முடியாது என கிளம்பி வந்திருக்கலாம். ஆனால், அப்படி செய்யவில்லை. அந்த படம்தான் என் கேரியரையே மொத்தமாக கெடுத்துவிட்டது என்று வருத்தப்பட்டார். அம்பிகா அந்த படத்தின் பெயரை குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை என்றாலும், ரசிகர்கள் "அவன் இவன்" படம் தான் அவரது கேரியரை கெடுத்தது என்று கூறுகின்றனர்.