#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா? கதறி அழும் பிரபலங்கள்!
தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஓன்று விஜய் தொலைக்காட்சி. புது புது நிகழ்ச்சிகள், தொடர்கள் என தினம் தினம் புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது விஜய் தொலைக்காட்சி. அதேபோல விஜய் தொலைக்காட்சியில் பங்கேற்கும் பிரபலங்களையும் உலகறிய செய்வதில் விஜய் தொலைக்காட்சி முன்னோடியாக திகழ்கிறது.
சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் என தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்குள் வந்தவர்கள்தான். கலக்கப்போவது யாரு, பிக் பாஸ், சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலம்.
அந்தவகையில் சூப்பர் சிங்கர் ஜூனியருக்கான சீசன் ஆறு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட குழந்தைகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் பூவையார்.
இந்நிலையில், வரும் வாரத்திற்கான சூப்பர் சிங்கர் ப்ரோமோ வீடியோ தற்போது ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதில் பூவையரின் தந்தை இறந்துவிட்டதாகவும், பூவையார்தான் தங்களது குடும்பத்தை காப்பாற்றுவதாகவும் கூறி அவரது உறவினர்கள் விஜய் டிவி மேடையில் கதறி அழுகின்றனர்.
அவர்களின் அழுகையை பார்த்த விஜய் டிவி பிரபலங்கள், நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை ஜனனி ஐயர், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் கதறி அழுகின்றனர். இறுதியாக பாடகர் சங்கர் மஹாதேவன் பூவையார் இந்தியாவின் தலைசிறந்த கலைஞனாக வருவார் என்று வாழ்த்தியுள்ளார்.