#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஷாக்கிங்... "நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் இதுதான்"... மனம் திறந்த நடிகை மும்தாஜ்.!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மும்தாஜ் இதுவரை தான் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் இது தான் என்று உண்மையை கலங்கிய கண்களோடு தெரிவித்துள்ளார்.
90s கிட்ஸ் பலருக்கும் மும்தாஜ் கனவு கன்னியாக இருந்தவர் இவரின் பல பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டவர்கள் 90ஸ் கிட்ஸ். முதல் படம் சுமாராக ஓடினாலும், படத்தில் நடித்த மும்தாஜுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு கூடியது என்றே கூறலாம். இதையடுத்து குஷி, லூட்டி, சாக்லேட் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். ஓரிரு படங்களில் குத்தாட்டமும் போட்டார்.
எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் குஷி படத்தில் விஜயுடன் 'கட்டிப்புடி கட்டிப்புடிடா' பாடலுக்கு மும்தாஜ் ஆடிய நடனம் இளசுகளிடையே அதிக வரவேற்பு பெற்று தந்தது. அதையடுத்து சாக்லேட் திரைப்படத்தில் வரும் 'மல மல' பாட்டு இவரை வேறு இடத்திற்கு கொண்டு சென்றது. இப்படி தன் நடிப்பாலும், நடனத்தாலும், கவர்ச்சியாலும் இளசுகளை கட்டி போட்டு வைத்திருந்தார் மும்தாஜ்.
அதன் பின் நிறைய படங்களில் இவரை காணவில்லை அதன் பிறகு கம்பேக் ஆக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் நிறைய இடத்தில் இவர் சில நோயால் பாதிக்கப்பட்டதாகவும் அதனால் அவதிப்பட்டு வருவதாகவும் நேரடியாகவே கூறியிருந்தார். இந்நிலையில் சமீப காலமாக மும்தாஜ் புர்காவில் மட்டும்தான் பார்க்க முடிந்தது அவர் நிறைய பேட்டியில் அல்லாவை மனதார தான் ஏற்றுக் கொண்டதாகவும் இதற்கு முன் நான் செய்த பாவங்களை நினைத்து தற்போது வருந்துவதாகவும் கூறியிருந்தார்.அதோடு தன் புகைப்படங்களை இனிமேல் பகிர வேண்டாம் என இரு கைகளை கூப்பி கலங்கிய கண்களோடு பேட்டி அளித்திருந்தார்.
அந்த பேட்டியில் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு வாழ்க்கையில் நான் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்துள்ளேன். ஒரு கட்டத்தில் இறைவனை நாட தொடங்கினேன் நான் திருமணம் செய்து கொள்ளாதது பற்றி என்னென்னமோ பேசுகிறீர்கள் எனக்கு 25 வயது இருக்கும்போதே ஆட்டோ இம்யூனிட்டி டிஸ்ஆர்டர் நோய் இருப்பது தெரியவந்தது. அதனால் திருமண வாழ்க்கையில் இருக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். இதுதான் நான் திருமணம் செய்து கொள்ளாததற்கு ஒரே காரணம் குடும்பத்தோடு இப்போது நன்றாக நேரத்தை கழித்து நிம்மதியாக உள்ளேன் என்றும் மற்றவர்களை பார்க்கும்போது எனக்கும் அந்த ஆசை எல்லாம் வரும் ஆனால் அதற்கு நான் இப்போது மனரீதியாக தயாராக இல்லை என்பதே உண்மை என்று மும்தாஜ் கூறியுள்ளார்.