பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் எழிலின் காதலி இவர்தானா.. மனம் திறந்த எழில்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் முதலில் பெங்காலி மொழியில் 'ஸ்ரீமோயி' என்றும் தெலுங்கில் 'கிரக லட்சுமி' என்றும் ஒளிபரப்பான பிரபலமான தொடராகும்.
பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்தான ஒரு குடும்ப பெண்ணின் கஷ்டங்களையும் அவள் சந்திக்கும் சவால்களையும் ரசிக்கும் விதமாக எடுத்திருப்பதால் இந்த நாடகத்திற்கு ரசிகர்கள் அதிகம் இருக்கின்றன.
மேலும், இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எழில் என்கிற விஜய் விஷாலுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.
அந்நிகழ்ச்சியில் அவருடைய காதலி யார் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதற்கு அவர் என்னுடைய காதலி த்ரிஷா தான் அவரை பல வருடங்களாக காதலித்து வருகிறேன் என்று காமெடியாக பதில் அளித்தார். இதனால் மொத்த அரங்கமும் சிரிக்க துவங்கியது. இந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.