#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொரோனா ஊரடங்கால் செக்யூரிட்டியாக மாறிய பிரபல நடிகர்! வைரலான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், திரையுலகே பெருமளவில் முடங்கி போயுள்ளது.
இந்நிலையில் ஏராளமான கன்னட திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு அப்பாவாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீநாத் வசிஷ்டா. இவர் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் செக்யூரிட்டிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தற்போது காவலாளிகள் யாரும் இல்லாத நிலையில், புதிதாகவும் யாரும் வேலைக்கு வர முன்வரவில்லை. இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கு வசிப்பவர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலிருந்தும் ஒருவர் முன்வந்து 8 மணி நேரம் என்ற அடிப்படையில் காவல்காக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து நடிகர் ஸ்ரீநாத் வசிஷ்டா முழு உடல் பாதுகாப்பு கவச உடையை அணிந்து அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து காவல் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எடுத்த செல்பி புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.