#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்!. துடிதுடித்து போன ரசிகர்கள்!.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ராஜா ராணி சீரியலில் கார்த்திக்-செம்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் சஞ்சீவ்-ஆல்யாவிற்கு இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் இந்த சீரியல் மூலம் தற்போது உண்மையிலேயே காதலிக்கவும் துவங்கி விட்டனர்.
சமீப காலமாக இவர்கள் இருவரும் இணைந்து, பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து தங்களுடைய காதலை உறுதி செய்தனர். சமீபத்தில் இவர்கள் புத்தாண்டுக்காக வெளியூர் சென்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.
எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் சஞ்சீவ், கடைசியாக புத்தாண்டுக்கு வெளியூர் சென்ற புகைப்படத்தை மட்டுமே வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் பலர் சஞ்சீவ்விடம் தொடர்ந்து, அவருக்கு மெசேஜ் அனுப்பி கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் அவர் தனது சமூக வலைதளத்தில், எல்லோருக்கும் வணக்கம், எந்த ஒரு பதிவும் இல்லாததற்கு மன்னிப்பு கேட்கிறேன். நான் விபத்தில் சிக்கிக் கொண்டேன் ஆனால் பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை, உங்களது பிராத்தனையால் நான் நலமாகி வருவேன் என பதிவு செய்துள்ளார்.