#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாணி ராணி சீரியல் புகழ் பிரபல சீரியல் நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா உறுதி..! படப்பிடிப்பில் வந்த சிக்கல்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
வாணி ராணி சீரியல் புகழ் நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி தொடரில் பூஜா என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரபல சீரியல் நடிகை நவ்யா சாமி. தெலுங்கு சீரியல்களில் மிகவும் பிரபலமான இவர் தமிழிலும் மிக பிரபலம், தற்போது சீரியல் படப்பிடிப்புகளில் கலந்துகொண்ட இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள நடிகை நவ்யா சாமி, சீரியலில் போட்டி அதிகம் என்பதால் வேறு வழியின்றி படப்பிடிப்புகளில் கலந்துகொண்டேன், தற்போது கொரோனா உறுதியாகி இருப்பதால் என்னுடன் நடித்த சக நடிகர், நடிகைகளையும் சிக்கலில் சிக்க வைத்துவிட்டேனோ என்ற குற்ற உணர்ச்சியில் உள்ளேன்.
கொரோனா என தெரிந்ததும் இரவு முழுவதும் கதறி அழுதேன், எனது அம்மா இன்னும் அழுதுகொண்டிருக்கிறார். மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். பெரிதாக அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதால் வீட்டில் தனிமையில் உள்ளேன்.
மருத்துவரின் ஆலோசனைப்படி அதிக சத்துமிக்க உணவுகளை உட்கொள்கிறேன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றுவதாக நடிகை நவ்யா சாமி கூறியுள்ளார்.