#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முடிவுக்கு வருகிறது பிரபல சன் டிவி சீரியல்! எந்த சீரியல் தெரியுமா?
தொலைக்காட்சி சீரியல் என்றாலே அதில் மிகவும் புகழ்பெற்றது சன் டீவிதான். இன்று இந்திய அளவில் சன் டிவி முதல் இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் டிவி சீரியல்கள்தான். முன்பெல்லாம் பெண்கள் மட்டுமே டிவி சீரியல் பார்த்து வந்தனர், ஆனால் இன்று அந்த நிலைமை மாறி சிறுவர்கள், இளைஞர்கள் என ஆண்களும் டிவி சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில் சன் டீவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் பிரபலமான தொடர்களில் ஓன்று வாணி ராணி. நடிகை ராதிகாவின் தயாரிப்பு நிறுவனமான ராடான் மீடியா இந்த தொடரினை தயாரித்து வருகிறது. மேலும் நடிகை ராதிகா வாணி, ராணி என இரண்டு வேடங்களில் நடித்துவருகிறார்.
பலவருடங்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாணி ராணி சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அதே நேரத்தில் சந்திரகுமாரி என்ற புது சீரியலை ராடான் மீடியா தயாரிக்க அதிலும் ராதிக்கவே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்த புது தொடருக்கான ப்ரோமோ தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் தேதி அறிவிக்கப்படாத நிலையில் விரைவில் புது தொடர் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.