"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் காலமானார்!. சினிமாத்துறை சோகத்தில் மூழ்கியது!.
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள், பலகுரல்களில் பேசக்கூடிய திறன் மூலமாகவே தொலைக்காட்சிகளில் பிரபலமாகி பின்னர் சினிமாவில் பிரபலமானர்கள் எடுத்துக்காட்டாக விவேக், மயில்சாமி, சிவ கார்த்திகேயன் ஆகியோர் ஆவார்.
ஆனால், இவர்களுக்கு முன்னதாக, தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் என்று பெயர் எடுத்தவர் ராக்கெட் ராமநாதன். ஒருபுல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரிசம், வளர்த்தகடா, மண்சோறு, கோயில்யானை, நாம், வரம் உட்பட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார்.
1970-களில் அமெரிக்கா ராக்கெட் விட்ட சமயத்தில் கவிஞர் வில்லிப்புத்தன், ‘ராக்கெட்’ என்று அடைமொழி வைத்துக்கொள், கொஞ்சம் வேகமாக இருக்கும் என்று சொல்ல, அன்றிலிருந்து ‘ராக்கெட் ராமனாதன்’ ஆனார்.
சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த இவருக்கு பானுமதி என்ற மனைவியும், சாய்பாலா என்ற மகளும், சாய்குரு பாலாஜி என்ற மகனும் உள்ளனர். 74 வயதாகும் இவர் சமீபகாலமாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார்.
தன் இறுதி நாட்களில் குடும்பத்தினரைக்கூட அடையாளம் கொள்ளமுடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருந்தார். இதற்காகச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
ரஜினியின் ஆரம்பக்கால நண்பரான இவர் தமிழக அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருதுகள் பெற்றவர். இவருக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.