#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தயவுசெஞ்சு முதல்ல இதை செய்யுங்க! எல்லை மீறி ரசிகர் விடுத்த கோரிக்கை! நடிகை சமந்தா கொடுத்த நெத்தியடி பதிலை பார்த்தீர்களா!
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவர் விஜய், சூர்யா,தனுஷ், ஜீவா, விஷால் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏரளமான வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கிறார்.
மேலும் சமந்தா கைவசம் தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் கேம் ஓவர் உள்ளிட்ட படங்கள் உள்ளன.நடிகை சமந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாகார்ஜுன் மகனும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பின்னரும் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அவ்வப்போது தனது கணவருடனும் ஊர் ஊராக சுற்றி ரொமான்டிக்காக நேரங்களை செலவிட்டும் வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் நடிகை சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் தயவுசெய்து நாக சைதன்யாவை விவாகரத்து செய்துவிடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனைக்கேட்ட சமந்தா என்னால் அது முடியாது வேண்டுமென்றால் அதை நீங்க நாகசைதன்யாவிடம் கூறுங்கள் என தெரிவித்துள்ளாராம்.