அடையாளமே தெரியலையே.. ஈரம் பட நடிகையின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்.?



Fans comments in eeram movie actress photo

மலையாளத்தை தாய்க் கொண்ட சிந்து மேனன், பெங்களூரில் பிறந்தவர். இவர் 1994ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'ராஷ்மி' படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 

Kollywood

2001ஆம் ஆண்டு 'சமுத்திரம்' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் விஜயுடன் 'யூத்' படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தார். பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி தமிழில் எந்த படமும் அமையவில்லை. வாய்ப்பும் கிடைக்கவில்லை.

ஆனால் சிந்து மேனன் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2009ஆம் ஆண்டு "ஈரம்" படத்தில் நடித்தார். மிகவும் எளிமையான, எதார்த்தமான நடிப்பில் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் சிந்து மேனன்.

Kollywood

இந்நிலையில், 2010ம் ஆண்டு லண்டன் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டி லாகிவிட்ட சிந்து மேனன், தற்போது 3 குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறார். இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "ஈரம் பட நடிகையா இது? அடையாளமே தெரியல" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.