#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக கெத்து காட்டும் நயன்தாரா.! வைரலாகும் மாஸ் புகைப்படம்!!
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இருவரும் 'வேலைக்காரன்' படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து Mr லோக்கல் படத்தில் நடித்துள்ளனர்
.
இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
இயக்குனர் ராஜேஷின் படங்கள் அனைத்தும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் படங்களாகவே இருக்கும் என்பதால் இந்த படமும் நகைச்சுவை சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாத்திருந்தனர்.
இந்நிலையில் Mr .லோக்கல் திரைப்படம் இன்று வெளியானது. இந்நிலையில் பல திரையரங்குகளில் சிவகார்த்திகேயனுக்கு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து சென்னை திரையரங்கு ஒன்றில் சிவகார்த்திகேயனின் பேனருக்கு போட்டியாக நயன்தாராவிற்கு மட்டும் ரசிகர்கள் பெரிய அளவில் பேனர் வைத்து அசத்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.