#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
Fast X Trailer: விட்ட இடத்தில் பிடிக்க தயாரான Fast & Furious... டொமினிக் டொரோடோவின் ஆட்டம் ஆரம்பம்.. அட்டகாசமாக வெளியானது Fast X ட்ரைலர்..! வீடியோ உள்ளே..!
பாஸ்ட் & பியூரியஸ் படத்தின் 10ம் பாகம் டிரைலர் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர்கள் வின் டீசல், ஜஸ்டின் லின், ஜேம்ஸ் வான், எஃப். கேரி கிரே, ராப் கோஹன், லூயிஸ் லெட்டரியர், ஜான் சிங்கிள்டன், பிலிப் அட்வெல் இயக்கத்தில், கிட்டத்தட்ட 9 பாகங்களாக வெளியாகி உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் Fast & Furious திரைப்படங்கள்.
இந்த படத்தின் ஒவ்வொரு பாகமும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும். படத்தில் வின் டீசல் (டொமினிக் டொரெடோ), பால் வாக்கர் (பிரையன் ஓ'கானர்), மைக்கேல் ரோட்ரிக்ஸ், ஜோர்டானா ப்ரூஸ்டர், டைரஸ் கிப்சன், ஜேசன் ஸ்டாதம், தி ராக், லுதாகிரிஸ், சங் கங் உட்பட பலரும் நடித்திருந்தனர்.
Fast & Furious 7ம் பாகத்தின் போது நடந்த விபத்தில் நடிகர் பால் வால்கர் மரணமடைந்த நிலையில், அதுவரை குடும்பமாக வாழ்ந்தவர்கள் இனி Fast & Furious படம் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தனர். அதனையடுத்து, 7ம் பாகம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் எடுக்கப்பட்டு வெளியானது.
ராக்கும் - ஜேசனும் இணைந்து Fast & Furious Hobbs & Shaw என்ற படமும் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், Fast & Furious படத்தின் 10ம் பாகமான Fast X லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில், 19 மே 2023 அன்று உலகளவில் வெளியாகிறது. மேலும் இப்படத்தில் கூடுதல் சிறப்பாக ஜான்சீனா நடிக்கிறார்.
இந்த படத்தின் ட்ரைலர் கடந்த 1 மணிநேரம் முன்பு வெளியாகியுள்ளது. அந்த ட்ரைலரில் படத்தில் வின் டீசலுடன் பால் வால்கரும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். இருவரும் சேர்ந்து வங்கியில் பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் பணத்தை பெட்டகத்தோடு சேர்ந்து கொள்ளையடித்து செல்வார்கள்.
இந்த விபத்தில் முன்விரோதமாகும் வில்லன் காத்திருந்து டொரோண்டோவின் குடுமப்த்தை எப்படி கதைமுடிக்க போகிறார். அதில் இருந்து நாயகன் குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்ற பரபரப்பு காட்சிகளை அமைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.