#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்த 4 பிரபல நடிகர்கள் இவர்கள்தானாம்! அதற்கான காரணமும் கூறியுள்ளார்!
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சிறு சிறு வேடங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நடித்துவந்த இவர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். எளிமையான பேச்சு, கனிவான உள்ளம் என இவரது எளிமை இவரை மக்கள் செல்வனாக மாற்றியுள்ளது.
தற்போது விஜய் நடித்துவரும் தளபதி 64 படத்தில் வில்லனாக நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி தனக்கு பிடித்த 4 பிரபல நடிகர்கள் பற்றி கூறியுள்ளார்.
1 . சிவாஜி:
எந்த ஒரு கதையாக இருந்தாலும், கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு நடிக்க கூடியவர் என்பதால் சிவாஜியை விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடிக்குமாம்.
2 . கமல்:
மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவர் கமல். அவரது திறமையால் அவரை மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.
3 . மோகன்லால்:
எந்த ஒரு கதாபாத்திரத்திற்கும் ஏற்றாற்போல் மிகவும் அசலாட்டக்க நடிக்க கூடிய நடிகர் என்பதால் அவரை மிகவும் பிடிக்கும் என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
4 . எம்.ஜி.ஆர்:
மிக அருமையான கதை தேர்வு, சிறந்த நடிகர் என்பதால் எம்ஜியாரை மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.