கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
#Breking: உருவானது ஃபெங்கல் புயல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஃபெங்கல் புயல் வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று பின் திடீரென வலுகுறைந்தது. இந்த புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழகத்தை நோக்கி வந்த நிலையில், தற்போது மீண்டும் புயல் உருவாகி இருக்கிறது. இதனால் வடகடலோரம், அதனை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கான அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ரெட் அலர்ட்
இன்று புதுச்சேரி, காரைக்கால், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: வடகடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கிமீ வேகத்தில் பலத்த தரைக்காற்று.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
உருவானது புயல்
இந்நிலையில், பிற்பகல் 02:30 மணியளவில் ஃபெங்கல் புயல் உருவாகிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலையே வங்கக்கடலில் மீண்டும் ஃபெங்கல் புயல் உருவாகலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது ஃபெங்கல் புயல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் அதிகரிக்கும்
நீண்ட தாமதம், இழுபறிக்கு பின்னர் ஃபெங்கல் புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருப்போர் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சற்றுமுன்: சென்னை உட்பட 12 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை 12 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.!