#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆடை இல்லாமல் நடித்தது ஏன்!! 'ஆடை' பற்றி அமலாபால் விளக்கம்
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.
தலைவா, வேட்டை , வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், அம்மா கணக்கு, திருட்டு பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலாபால் ஒரே வருடத்தில் அவரை விட்டு பிரிந்தார்.
விவாகரத்தான பிறகு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வரும் நடிகை அமலாபால் கவர்ச்சி காட்டவும் தயங்குவதில்லை. சமீபத்திய படங்களில் அவர் மிக கிளாமராக தோன்றியுள்ளார்.
இந்நிலையில் மேயாதமான் படத்தை இயக்கிய இயக்குனர் ரத்னகுமாரின் அடுத்த படமான 'ஆடை'யில் அமலாபால் நடித்து வருகிறார்.
நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. அதில் அவர் ஆடை ஏதும் இல்லாமல் டேப்பை மட்டும் சுற்றி உள்ளார். அவரை யாரோ தாக்கியது போல அவரது உடலில் சில ரத்தகாயங்கள் உள்ளன.
இவ்வாறு 'ஆடை' என்று தலைப்பு வைத்து விட்டு ஆடையே இல்லாமல் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருப்பதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதை பற்றி அமலாபால் பேசுகையில் ''ஆடை' படம் எனது கதாப்பத்திரத்தில் முக்கியமான படம். பர்ஸ்ட் லுக் பார்த்துவிட்டு விமர்சிப்பவர்கள் படத்தை பார்த்து விட்டு பாராட்டுவார்கள். நான் ஏன் அந்த ஆடையில் இருக்கிறேன் என்பது படம் பார்க்கும் போது புரியும் என்றார்.