பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சுதந்திர போராட்ட வீராங்கனை, தென்னாட்டின் ஜான்சி ராணிக்கு சிலை.! திறந்து வைத்தார் தமிழக முதல்வர்.!
கடலூரில் காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள தென்னாட்டின் ஜான்சி ராணி அஞ்சலை அம்மாளின் சிலையை தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீராங்கனையான அஞ்சலை அம்மாள் சிறு வயது முதலே தேசப்பற்று மிக்கவராக திகழ்ந்து வந்துள்ளார். காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கிய போது அதில் கலந்துகொண்டு பொது வாழ்க்கையை தொடங்கிய அவர் உப்பு சத்தியாகிரகம், அந்நிய ஆடை எதிர்ப்பு போராட்டம், தனிநபர் சத்தியாகிரக போராட்டம் என பலவற்றிலும் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றுள்ளார்.
அவர் விடுதலைப் போராட்டத்திற்காக தனது சொத்துக்கள் மற்றும் தான் குடியிருந்த வீட்டையே விற்று தியாகம் செய்தவர். இவர் காந்தியடிகளால் தென்னாட்டின் ஜான்சிராணி என அழைக்கப்பட்டார். இந்நிலையில் அஞ்சலை அம்மாளை போற்றி வணங்கும் வகையில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடலூர் மாநகராட்சி காந்தி பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள தென்னாட்டின் ஜான்சிராணி அஞ்சலை அம்மாளின் சிலையை இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி காட்சி வாயிலாக அவர் சிலையை திறந்து வைத்துள்ளார்.