பிரதமர் மோடியை முந்திய நேசமணி; உலக அளவில் பெருகும் ஆதரவு.!



friends tamil movie - contracter nasamani - vairal hestack

ட்விட்டரில் நேற்று முதல் இந்திய அளவில்  ட்ரெண்டிங்கில் இருந்த '#Pray_for_Neasamani' என்று ஹேஷ் டாக் தற்போது உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. யார் இந்த நேசமணி என்ற குழப்பம் பலருக்கும் இருந்து வந்தது. 
 
ப்ரெண்ட்ஸ் படத்தில் தளபதி விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா ஆகியோர் இடம்பெற்ற  வடிவேலுவின் சுத்தியல் காமெடிதான் தற்போது சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியவந்துள்ளது. சிறிய தீயாய் பற்றிய '#pray_for_Neasamani' என்ற ஹேஷ் டேக் தற்போது காட்டுத் தீயாய் பரவி வருகிறது. சாதாரண நெட்டிசன்கள் துவங்கி திரை மற்றும் விளையாட்டு பிரபலங்களும் இதில் ட்வீட் செய்து வருகின்றனர்.

Friends movie

உண்மையில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் தான் அவரின் பெயரை குறிப்பிட்டு இது போன்ற ஹேஷ் டாக்கினை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்துவர். ஆனால் உண்மை கதாபாத்திரமே இல்லாமல், ஒரு படத்தில் நடந்த காமெடி சீனை மட்டுமே மையப்படுத்தி இந்த ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Friends movie

#Nesamani என்ற ஹேஷ் டேக்கில் இதுவரை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டுவிட்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியை விளக்கும் #ModiSarkar2 என்ற ஹேஷ் டேகில் வெறும் 18 ஆயிரம் டுவிட்கள் தான் வெளியாகியுள்ளன.

உலகளவில் நேசமணி ஹேஷ்டேக் நம்பர் 1 இடத்திலும், மோடி சர்கார் ஹேஷ்டேக் 5வது இடத்திலும் டிரெண்டாகி வருகிறது. பிரதமர் மோடி பதவியேற்கும் நேரத்திலும் இந்தியளவில் நேசமணி ஹேஷ்டேக் டிரெண்டாகி வருவது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.