கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சுற்றி வளைத்த கும்பல்... தலைமை ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்.!! 2 இளைஞர்கள் கைது.!!
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியை மீது மிளகாய் பொடி தூவி தங்க நகை கொள்ளையடிக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 2 இளைஞர்களை கைது செய்துள்ள காவல்துறையினர் மற்ற குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அலிஸ் மேரி(52). இவர் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மேலும் அலிஸ் மேரி தினமும் தனது மருமகனுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு செல்வதை வழமையாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று வழக்கம் போல் தனது மருமகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று இருக்கிறார்.
இதையும் படிங்க: மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்... ஆசிரியர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்.!!
மிளகாய் பொடி தூவி கொள்ளை
தலைமை ஆசிரியை சென்ற வாகனத்தை வழிமறித்த கும்பல் அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி, அலிஸ் மேரி அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். இதனைத் தொடர்ந்து நகை பறிப்பு தொடர்பாக தலைமை ஆசிரியை அலிஸ் மேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
கொள்ளையர்கள் கைது
இதனையடுத்து தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் புரசன்காடு என்ற பகுதியைச் சேர்ந்த பிரிதிவிராஜ் 22 மற்றும் விவேகானந்தன் 28 ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் விவேகானந்தன் தனது சிறை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து விவேகானந்தன் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரை கைது செய்த காவல்துறை அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தது.
இதையும் படிங்க: "பொண்டாட்டிய கொன்னத வெளில சொல்லவா.." போட்டு தள்ளிய ஹவுஸ் ஓனர் கள்ளக்காதல் ஜோடி.!! பரபரப்பு சம்பவம்.!!