கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்... ஆசிரியர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்.!!
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து கடந்த மாதம் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கணித ஆசிரியர்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு என்ற கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பி. முத்துக்குமரன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஆசிரியர் முத்துக்குமரன் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அவர் மீது புகார் எழுந்தது.
முத்துக்குமரன் கைது
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக சைல்ட் லைன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திடம் சைல்ட் லைன் அதிகாரிகள் புகார் செய்தனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவரை காவல்துறை கைது செய்தது.
இதையும் படிங்க: "பொண்டாட்டிய கொன்னத வெளில சொல்லவா.." போட்டு தள்ளிய ஹவுஸ் ஓனர் கள்ளக்காதல் ஜோடி.!! பரபரப்பு சம்பவம்.!!
பாய்ந்த குண்டர் சட்டம்
இந்த சம்பவம் தொடர்பாக ஒரத்தநாடு உட்கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ஷானவாஸ் இலியாஸ் ஆசிரியர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம், ஆசிரியர் முத்துக்குமரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: கலாட்டா கல்யாணம்... மணமகனின் தாய்க்கு கத்தி குத்து.!! தந்தை வெறி செயல்.!!