அச்சு அசல் அப்படியே மறைந்த நடிகை சித்ரா போலவே இருக்கும் பெண்! தீயாய் பரவும் புகைப்படத்தால் ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!



Girl who look like chitra photo viral

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சித்ரா. அதனை தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் சித்ராவிற்கு கடந்த மாதம் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வரும் பிப்ரவரி  மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. 

 ஆனால் கடந்த இரு மாதத்திற்கு முன்பே இருவருக்கும் பதிவு திருமணம் நடைபெற்றுள்ளது. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்ரா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது ஹேமந்த்தான் என அவரை கைது செய்தனர். 

இந்நிலையில் சித்ரா மரணத்தால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களை ஆறுதல் அடைய வைக்கும் வகையில் அச்சு அசல் சித்ராவை போலவே இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் பாண்டியன் ஸ்டோர் முல்லை போல உடையணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.