கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இனி இவர்களுக்கும் ரூ 1000 மகளிர் உரிமை தொகை... யார் யாருக்கெல்லாம் தெரியுமா.?
தமிழ்நாடு அரசு சார்பில் மாதம் மாதம் தகுதியுள்ள ரேஷன் அட்டை பயனர்களுக்கு, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் 2 லட்சத்துக்கும் அதிகமான பேர் பயன் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் விடுபட்டுள்ள தகுதியான ஒரு சிலர் இருந்தால் அந்த பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
விரைவில் அவர்களுக்கும் மகளிர் தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதிதாக இவர்களும் விண்ணப்பித்து கொள்ளலாம் என கூறப்படுகிறது. அதன்படி புதிதாக திருமணமான மற்றும் புதிதாக ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படலாம்.
மேலும் முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படலாம். முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படலாம். இதன் மூலம் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. சிறுமியின் அந்தரங்க போட்டோ வாங்கி மிரட்டல்.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்.!
இதையும் படிங்க: முதல் மனைவியை மறந்து வேறொரு பெண்ணுடன் தார்மீக காதல்; திருமணம் முடிந்து அம்பலமான குட்டு.. வில்லங்கமான சம்பவத்தால் கம்பி எண்ணும் காவலர்.!