"எங்கள் சக்திக்கு மீறிய அனைத்தையும் செய்து வருகிறோம்" துருவ நட்சத்திரம் பட சிக்கல் குறித்து கெளதம் மேனன்!
2001ம் ஆண்டு "மின்னலே" திரைப்படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் கெளதம் மேனன். இவர் கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராகவும் உள்ளார். இவரது வாரணம் ஆயிரம் திரைப்படம் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் விக்ரம், ரிது வர்மா ஆகியோரை வைத்து கெளதம் மேனன் இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் "துருவ நட்சத்திரம்". இந்தப் படத்தை வெளியிட சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து கௌதம் மேனன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், "எங்களின் அர்பணிப்பினால் தான் துருவ நட்சத்திரம் இன்று உருவாகியுள்ளது. ஆனால் எங்களுக்கு எதிராக எல்லாமே மாறிய போதும் எங்களது ஆர்வமும், அர்ப்பணிப்பும் இப்படத்தை விரைவில் உலகத் திரையரங்குகளில் கொண்டு வந்து சேர்க்கும்.
நவம்பர் 24ம் தேதி இப்படத்தை வெளியிட எங்கள் சக்திக்கு மீறிய அனைத்தையும் செய்து முயற்சி செய்தோம். ஆனால் வெளியிட முடியவில்லை. அதில் எங்களுக்கு வருத்தமில்லை என்று சொன்னால் அது பொய்யாகி விடும். ஆனாலும் நாங்கள் பின்வாங்கி விடவில்லை என்று உங்களுக்கு சொல்கிறோம்" என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.