எங்கேயும் காதல்.. ஹன்சிகாவின் முதல் காதல் .! உண்மையை பகிர்ந்த ஹன்சிகா.?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தமிழில் முதன் முதலில் 'மாப்பிள்ளை' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரின் நடிப்பு பாராட்டப்பட்டு வந்தது.
இப்படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென தனி இடத்தை ரசிகர்களின் மனதில் பிடித்துள்ளார். இதன் பின்பு ஜெயம் ரவியுடன் 'எங்கேயும் காதல்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது.
இதனையடுத்து தற்போது ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாரிஸ்சிற்கு சென்ற புகைப்படத்தை பகிர்ந்து "என் அம்மாவின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் பல நாடுகளுக்கு செல்வோம், அதன்படி தற்போது பாரிஸ்சிற்க்கு வந்திருக்கிறோம்.
பாரிஸ் எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த இடம். என் முதல் கமர்சியல் ஹிட் திரைப்படமான எங்கேயும் காதல் இங்குதான் படமாக்கப்பட்டது" என்று இச்செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இப்பதிவிற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.