பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பேயாக களமிறங்கிய ஹன்சிகா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் தனுஷ், விஜய், சூர்யா, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. இந்த நிலையில் சமீபத்தில் இவர் நீண்ட கால நண்பரான தொழிலதிபர் சோஹல் கதாரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான பார்ட்னர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், இவரது நடிப்பில் வெளியான மை3 என்ற இணையத்தொடரும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது இவர் மை நேம் சுருதி, ரவுடி பேபி, 105 மினிட்ஸ் ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய நடிப்பில் விரைவில் ரிலீசாக உள்ள திரைப்படம் கார்டியன். இந்த திரைப்படத்தை சபரி மற்றும் குரு சரவணன் இயக்கியுள்ளனர்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் நவம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகை ஹன்சிகா பேயாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.