பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வாவ்.. நடிகை ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர்தானா?? அழகிய ரொமான்டிக்கான புகைப்படத்துடன் உறுதியான திருமணம்.!
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. அவர் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி ஹீரோயினாக வலம்வந்தார். கொழுகொழுவென இருந்த அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவாகினர்.
ஹன்சிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் கொழுக் மொழுக்கென இருந்த அவர் தற்போது உடல் எடை குறைந்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார். மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளித்த படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி, தொழிலதிபரை மணமுடிக்க உள்ளதாகவும், இருவருக்கும் டிசம்பர் 4-ம் தேதி மிகவும் பிரமாண்டமாக ஜெய்ப்பூர் அரண்மனையில்
திருமணம் நடக்கவிருப்பதாகவும் அண்மைகாலமாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நடிகை ஹன்சிகா ஈபில் டவர் முன் இருக்கும் அழகிய ரொமான்டிக்கான புகைப்படத்துடன் தொழிலதிபர் ஷோகேலை திருமணம் செய்வதை உறுதிப்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.