பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வானவேடிக்கைகளுடன் அரண்மனையில் வண்ணமயமாக நடந்த நடிகை ஹன்சிகா திருமணம்.! இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்!!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. அதனைத் தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார்.
ஆரம்பத்தில் கொழுகொழுவென இருந்த அவரை ரசிகர்கள் சின்ன குஷ்பு என செல்லமாக அழைத்தனர். இந்த நிலையில் ஹன்சிகா சமீபத்தில் தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் பல்வேறு திருமண சடங்குகளும் விமரிசையாக நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் இன்று நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சூழ நடிகை ஹன்சிகாவின் திருமணம் வானவேடிக்கைகள், அழகிய பட்டாசுகளுடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் புதுமண ஜோடிக்கு திரையலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.