#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா" - 90's களின் ஸ்வீட்டி டால் மீனாவுக்கு இன்று பிறந்தநாள்..! குவியும் வாழ்த்துகள்..!
தென்னிந்திய திரையுலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்த முன்னணி நடிகை மீனா. இவர் கடந்த 1982 ஆம் வருடம் வெளியான நெஞ்சங்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, ரஜினிகாந்துடன் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்திலும் நடித்திருந்தார். படைவீட்டு அம்மன் உட்பட பல திரைப்படங்களில் அம்மன் வேடத்திலும் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் அதிக படங்கள் நடித்து பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்ற நடிகை மீனா, வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார்.
தனது வாழ்நாட்களில் பல மொழியிலும் படங்களை நடித்து கொடுத்த மீனா திருமணத்திற்கு பின்னர் பெரியளவில் படங்களில் நடிக்கவில்லை. தென்னிந்திய சிறந்த நடிகைக்கான விருது, பிலிம் பேர் விருது, தமிழ்நாடு அரசு விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
இவரின் மகள் விஜய்யுடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருந்தார் இறுதியில் நடிகை மீனா ரஜினிகாந்துடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இன்று அவருக்கு பிறந்தநாள். அவருக்கு 41 வயதாகிறது. அவரின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.