#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையை போலீஸ் அதிகாரி இப்படியா செய்வது!. புதிதாக வெடித்த பாலியல் புகார்!.
பெண்கள் சினிமா உலகில் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை சமூக வலைதளங்களில், மீ டூ இயக்கத்தின் மூலம் கூறி வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக சில பிரபலங்கள் மீது, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாடகி சின்மயி செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பரபரப்பான குற்றச்சாட்டை பாடகி சின்மயி கூறினார். இதனையடுத்து பாடகி சின்மயிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் பேசிவந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தில் நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். மீ டூ இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். எனக்கும் இந்தப் பாலியல் தொல்லை நடந்திருக்கிறது.
நான் பட வாய்ப்பு கேட்டு செல்லும் சமயத்தில் எனது ஆடையைச் சரிசெய்வது போலவும், முத்தக் காட்சியில் நடிக்கச் சொல்லித்தருவது போலவும் என்னிடம் சிலர் தவறாக நடந்து கொண்டனர்.
இதுதவிர என் வீடு அருகே இருந்த போலீஸ்காரர் ஒருவர் என்னை பாலியல் ரீதியாக அணுக முயற்சி செய்தார். சில மாதங்களுக்கு முன் சாலையில் நின்ற பெண் ஒருவரிடம் போலீசார் ஒருவர் என்ன ரேட் எனக் கேட்கும் வீடியோ வெளியானது; அந்தப் பெண் நான் தான்” என்றார்.
இது குறித்து புகார் தெரிவித்திருக்கலாமே என்று கேட்டதற்கு, “காவல் துறையிலும் பல நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருசிலரின் நடவடிக்கைக்காக ஒட்டுமொத்த துறையையும் களங்கப்படுத்த கூடாது என்பதற்காக தான் எதையும் வெளியிடவில்லை என கூறினார்.