#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் டிவி பூவையாருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா? என்ன விஷயம் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் போன்ற எண்ணற்ற கலைஞர்கள் விஜய் தொலைக்காட்சி மூலம்தான் தமிழ் சினிமாவில் பிரபலமானார்கள். அதேபோல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் பல்வேறு பின்ணணி பாடகர்களும் தமிழ் சினிமாவில் உருவெடுத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் சீசனில் மக்கள் மத்தியில் அதிக ஆதரவை பெற்றுள்ள போட்டியாளர்களின் ஒருவராக சென்னையை சேர்ந்த பூவையார் உள்ளார். இவர் பாடும் கானா பாடல்களுக்கு ஏகப்பட்ட ரசிங்கர்கள் உள்ளனர்.
சூப்பர் சிங்கர் மூலம் தளபதி 63 படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு பூவையாருக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு வாய்ப்பு பூவையாருக்கு கிடைத்துள்ளது. பிரபல நடிகரும், இசை அமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
மேடையில் பூவையாருடன் ஒரு பாடல் பாடிய ஆதி நிச்சயம் தன்னுடைய அடுத்த பாடலில் பூவையாரை பாட வைப்பதாக மேடையிலையே கூறி அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தார். இதன் மூலம் பூவையார்க்கும் மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.