#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புதிய அவதாரம் எடுக்கும் ஹிப்ஹாப் ஆதி!! வெளியான சூப்பர் தகவல்! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
அன்பறிவு என்ற படத்தில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
தமிழ் சினிமாவில் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் என தொடர்ந்து பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து, தனது பாடலால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தற்போது பிரபலமாக இருப்பவர் ஹிப்ஹாப் ஆதி. அதனைத் தொடர்ந்து அவர் மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, அப்படத்தில் தானே ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஆதி நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் அனைத்தும் வித்தியாசமாக இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். மேலும் இவரது படங்களுக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக அன்பறிவு என்ற படத்தில் நடிக்க உள்ளார். அஸ்வின் ராம் இயக்கும் இப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக காஷ்மிரா பர்தேசி நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.