#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தீயாய் பரவும் சூப்பர் தகவல்! செம உற்சாகத்தில் ஹிப்ஹாப் ஆதி ரசிகர்கள்!! என்ன விஷயம் தெரியுமா?
இளைஞர்களை உற்சாகப்படுத்தும் ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் போன்ற பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து, தனது மாஸான பாடலால் பட்டிதொட்டியெல்லாம் பெருமளவில் பிரபலமானவர் ஹிப்ஹாப் ஆதி. அதனைத் தொடர்ந்து இயக்குநராக களமிறங்கிய அவர் மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் அப்படத்தின் மூலம் தானே கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஆதி நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவரது படங்களுக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது.
இவ்வாறு இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டு விளங்கும் ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக சிவகுமாரின் சபதம் என்ற படத்தை இயக்கி, அவரே அதில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.