பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விஜய் ஆண்டனியின் ஹிட்லர் படம்; இன்று டீசர் வெளியீடு.. படக்குழு அறிவிப்பு.!
இயக்குனர் தனா இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில், நவீன்குமார் ஒலிப்பதிவில், சங்கத்தமிழன் எடிட்டிங்கில் உருவாகி வரும் திரைப்படம் ஹிட்லர். இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வழங்குகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் டீசர் இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்துள்ளார். மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கும் விஜய் ஆண்டனி, இப்படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்? என்ற எதிர்பார்ப்பானது எழுந்துள்ளது.