பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அட.. வெங்கட் பிரபுவின் சூப்பர் ஹிட் பட போஸ்டரை ஆட்டைய போட்ட ஹாலிவுட்.! அவரோட ரியாக்ஷனை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் தமிழில் கலகலப்பான, வித்தியாசமான கதைக்களத்தில் ஜாலியான பல படங்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில் வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜய் நடிப்பில் தமிழ் 'கோட்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
சிம்புவின் மாநாடு
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டான திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார். டைம் லூப் கதையின் அடிப்படையில் உருவாகியிருந்த இப்படம் சிம்புவிற்கு சிறந்த கம்பேக் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தில் சிம்புவின் புகைப்படத்தை மட்டுமே வைத்து வித்தியாசமாக பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது.
@tuneyjohn u magician
— venkat prabhu (@vp_offl) May 6, 2024
காப்பியடித்த ஹாலிவுட்
இந்நிலையில் தற்போது இப்படத்தின் போஸ்டரை அப்படியே ஹாலிவுட் படம் ஒன்று காப்பியடித்துள்ளது. டார்க் மேட்டர் என்ற ஹாலிவுட் திரைப்படம் மாநாடு படத்தின் போஸ்டரை போலவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உருவாக்கியுள்ளதாம். அது வைரலான நிலையில் அதனை கண்ட இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு பட போஸ்டரை டிசைன் செய்தவருக்கு இதனை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.