மகள், மனைவியுடன் ரேஸிங் களத்தில் தல அஜித்; வைரல் வீடியோ இதோ.!
சிக்கி தவிக்கிறேன்.. வீட்டு புரோக்கர் எடுத்த விபரீத முடிவு.! போலீசார் கண்ட ஷாக் வீடியோ!!
கோவை ரத்தினபுரி சுப்பாத்தாள் லே-அவுட் பகுதியில் வசித்து வந்தவர் கிரிஷ்குமார்.51 வயது நிறைந்த அவர் வீடு பார்த்துக்கொடுக்கும் புரோக்கராக இருந்துள்ளார். இவரது மனைவி லூர்து மேரி. கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடன் தொல்லையால் அவதி
இந்த நிலையில் கிரிஷ்குமாருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவரை இழந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கிரிஷ்குமாருக்கு கடன் தொல்லை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலிலும் இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் கசந்த வாழ்க்கை; பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை.!
விஷம் குடித்து தற்கொலை
இந்த நிலையில் அண்மையில் அவர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது அவரது செல்போனை ஆய்வுசெய்து பார்த்ததில், அதில் அவர் எனது சாவிற்கு யாரும் காரணமில்லை.கடன் தொல்லையாலே இப்படியொரு முடிவை எடுத்ததாக பேசிய வீடியோவை பதிவு செய்து இருந்துள்ளார்.
இதையும் படிங்க: பிடிக்காத ஹெர் ஸ்டைல் காரணமாக சோகம்; 9 வயது சிறுவன் விஷம் குடித்து தற்கொலை.!