அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
பிடிக்காத ஹெர் ஸ்டைல் காரணமாக சோகம்; 9 வயது சிறுவன் விஷம் குடித்து தற்கொலை.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூபாத் மாவட்டம், கங்காரம் பகுதியில் வசித்து வருபவர் காந்த ராவின். இவரின் இளையமகன் ஹரிஷ் வரதன். 9 வயதாகும் சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்.
சிறுவன் பள்ளியின் விடுதியில் தங்கியிருந்து பயின்று வரும் நிலையில், தற்போது கோடை விடுமுறை காரணமாக வீட்டிற்கு வந்துள்ளார். இன்னும் சில நாட்களில் பள்ளிகள் தொடங்கவுள்ளன.
பிடிக்காத சிகை அலங்காரத்தால் சோகம்
இதனிடையே, வீட்டில் இருந்த சிறுவனுக்கு தந்தை சிகை அலங்காரம் செய்துள்ளார். தந்தை தனது மகனுக்கு பிடிக்காத வகையில் சிகை அலங்காரம் செய்ததாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: வயிற்று வலியால் நடந்த சோகம்; அதிமுக பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை.!
இதனால் மனமுடைந்துபோன சிறுவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். கடந்த 5 நாட்களாக உயிருக்கு போராடிய சிறுவன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: 7 மாத டியூசன் காதல்; கைகளை துப்பட்டாவால் கட்டிக்கொண்டு உயிரைமாய்த்த 14 வயது சிறுமி, 16 வயது சிறுவன்.!!