பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கல்லூரி மாணவியை மடக்கி, குடும்பம் நடத்திவந்த கணவர்! பொங்கியெழுந்து மனைவி செய்த காரியத்தால் பரபரப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குழிவிளை பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு சுகந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 19 வயதில், 17 வயதில் என இருமகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் மினிபேருந்து ஓட்டுநரான மணிகண்டனுக்கு, அவரது பேருந்தில் பயணம் செய்யும் கல்லூரி மாணவியுடன் பழக்கமாகி காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மணிகண்டன், அந்த கல்லூரி மாணவியுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து மணிகண்டனின் மனைவிக்கு தெரியவந்த நிலையில், அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் கணவன் குடித்தனம் நடத்தும் அந்த கல்லூரி மாணவியின் வீட்டுக்கு சென்று , தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார். இதனால் கல்லூரி மாணவிக்கும், சுகந்திக்குமிடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதனைதொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மணிகண்டனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.