#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கர்ப்பம் என இலியானா பொய் சொல்கிறாரா? குழந்தைக்கு அப்பா யார் என்று கலாய்த்து வரும் நெட்டிசன்கள்.?
கோலிவுட் திரையுலகில் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடித்து வெளியான 'கேடி' திரைப்படத்தில் இலியானா மற்றும் தமன்னா கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் அறிமுகமானார் இலியானா.
இப்படத்திற்குப் பிறகு தமிழில் எந்த படங்களிலும் நடிக்காமல் தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்து பிரபலமாகி வந்தார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழில் 'நண்பன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
இந்தியில் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்த இலியானாவிற்கு பெரிதும் பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் சின்ன சீன்கள், செகண்டு ஹீரோயின் என குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பட வாய்ப்புகள் குறைந்து நிலையில் திரைத்துறையில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார்.
இது போன்ற நிலையில், திடீரென்று தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை பதிவிட்டார். ஆனால் அதற்கு குழந்தைக்கு தந்தை யார் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் இலியானா உண்மையாகவே கர்ப்பமாக இல்லை என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.