#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இமான் அண்ணாச்சி மனைவி யார் தெரியுமா? அவரே வெளியிட்ட ரகசியம்!
மக்கள் தொலைக்காட்சியில் "கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை" என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றியவர் தான் இமான் அண்ணாச்சி. அதன் பின்னர் "சொல்லுங்கண்ணே சொல்லுங்க" என்ற நிகழ்ச்சியில் ஆதித்யா தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைத் தொடர்ந்தார்.
பின்னர் சன் தொலைக்காட்சியில் "குட்டீஸ் சுட்டிஸ்" என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியிலும் பணியாற்றினார். 2006ல் சென்னை காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகரானார். அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார் இமான் அண்ணாச்சி.
இந்நிலையில் இமான் அண்ணாச்சி அளித்துள்ள புதிய பேட்டியில் தன்னுடைய மனைவி பற்றி பேசியுள்ளார். இமான் ஒரு சிறிய பள்ளியில் தான் படித்தாராம், அதில் மொத்தமே இரண்டு ஆசிரியர்கள் தான் இருப்பார்களாம்.
அதில் ஒருவர் தான் பச்சமுத்து என்கிற ஆசிரியர். அவரது மகளை தான் இமான் அண்ணாச்சி காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளதாக கூறியுள்ளார்.